Saturday, April 14, 2012

வாழ்க்கை !?!

நினைவில்லில்லை... அந்த பொழுதுகளின் சுவடுகள்
உறக்கங்களில் தேடி அழிகின்றன இரவுகள்

நிசிகளின் கணம் உயர்ந்து அழுத்துகின்றது

பின்னிரவில் ஒளிந்து கிடக்கிறது கனவுப்பூனை
வெளிச்ச வெருகுடன் சண்டையிடுகிறது..
என்னை பங்கு போடுகின்றன...
என் வசீகர கனவுச்ச்சதைகளுக்காய் ...
மார்பை கடித்து குழந்தை கலைத்தது கனவை
கடிகளுக்குள் தான் வாழ்க்கை என்பதுபோல்